Wednesday, September 26, 2007

செருப்பு விஜயம் !

செருப்பு விஜயம் !
வழி விடுங்கள் வருகிறது செருப்பு
இனி வரும் ராமனின் பாலாடை
மேலாடை கிலுகிலுப்பை கோவணம்...

சம்புகனின் சாம்பல் ?

வராது வரலாற்று வழிநெடுக
வள்ளல்களின் கம்பர்கள் தான்
அஞ்சத் தேவையில்லை அருமை இந்துவே.

அதோ...
அது தான் கோசலை மைந்தன்
கை விரல் சூப்பிய இடம்
இதோ...
அன்னவளை அன்னல் நோக்கிய இடம்
இது நுகந்த இடம்.

இருக்கட்டும்.
குகனுடைய குடிசை ?

அங்ஙனம் ஏதுமில்லை
அய்யன் திருவடி நிழலேஅவனுக்குச் சொந்தம்.

கைவண்ணம் கண்டோம்
கடப்பாரை சேவையிலே
கால் வண்ணம் காட்டப்-புதுக்காலனிகள் வருகிறதோ ?

அய்யன் பாதத்தின்
அளவென்ன அறிவீரா ?

அளவை அறிந்து
ஆவது என்ன ?
அரசுகள் மாறா
அளவுகள் மாறும்
அன்றும் இன்றும்
ஆள்வது செருப்பே !

வழிவிடுங்கள்
வருகிறது செருப்பு !

-தோழர் துரை சண்முகம்

புதிய கலாச்சாரம்,
செப்-அக்- 1992

3 comments:

Anonymous said...

தருனத்திற்கு பொருத்தமான
கவிதை தோழர்
படைப்புகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.

வாழ்த்துக்கள்.

பாலன்

Anonymous said...

நல்ல கவிதை
உங்கள் போராட்டங்கள்
வெற்றி பெற வேண்டும்
வாழ்த்துக்கள்.

பாவெல் said...

நல்ல கவிதை தோழர்