தொரட்டி
மூங்கில் கழி
உன் குறி நுழைத்து
என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்
விதர்பாவில் தொலைத்த உன் வீரத்தையா?
உன் விளைநிலத்தை
விதைகளை
தண்ணீரை
வன்புணர்ந்து திரியும்
மஹிகோ மான்சாண்டோக்கள்
உன் வீரத்தையும் வேட்டையாடுகிறார்கள்
விதர்பாவின் தெருக்களெங்கும்
என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்
உன்
சாதிய தினவுக்கு தீனி போடும்
கேடுகெட்ட அரசாங்கமோ
சிறப்புப் பொருளாதார மண்டலமெனும்
சிறைக்குள்
உன்னை சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும்போது
நீ என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்.
விரைத்தகுறி வளைத்து
உன் மலப்புழைக்குள் செருகி
'ஜெய்ஹிந்த்' பாரத் மாதாகி ஜே- என
போலி தேசிய முழக்கமிடும் ஆண்மகனே
நண்பன் யார் பகைவன் யார் எனத் தெரியாமல்
இருட்டில் பாயும் குருட்டுப் பூனையே
உன் வீரம் வெளிப்படும் களம்
என் சகோதரியின் யோனியென்று
யாருனக்கு போதித்தது?
'வெண்மணியே' தேசமாய்
விரிந்து நிற்கும் இப்பூமி
பற்றி எரிவதொன்றே தீர்வென்றால்
தீக்கங்குகள் பீறிட்டுக் கிளம்பும்
என் சகோதரியின் யோனிக்குள்ளிருந்து.
-ஜொஷிவா தமிழி
நெஞ்சை கனக்கச் செய்யும் கண்ணை சிவக்கச் செய்யும் கயர்லாஞ்சி படுகொலையை கண்டித்து எழுதப்பட்ட இந்த நெருப்புவரிகள் புது விசை எனும் பத்திரிக்கையில் தெறித்திருந்தவை..
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
வாழ்த்துக்கள் தோழர்!
தீ பரவட்டும் நாட்டின் மாசுக்களை பொசுக்கும் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு தீக்கங்கே என முழங்க செய்வோம் !
வலையுலகின் வருகைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்.
என் பிளாக்கில் இணைப்பு தந்துவிட்டேன்.
"வெண்மனியே தேசமாய்..." - எழுத்துப்பிழை உள்ளது. திருத்திக்கொள்ளுங்கள். நன்றி.
பார்ப்பனியத்தையும் மறுகாலனியத்தையும்
சாதி வெறியினூடாக விளக்கும் மிக
அருமையான கவிதை தோழர் மீண்டும்
பதிப்பித்ததற்கு நன்றி.
kavithai manathai kanakkavaikkirathu.
parthipan.
இக் கவிதை எனக்கு ஆத்திரத்தைத் தான் ஏற்படுத்துகிறது.கேர்லாஞ்சி மிருகங்கள் மீது மட்டுமல்ல, கவிதை எழுதிய நபர் மீதும்.கேர்லாஞ்சி மிருகங்களிடம் என்ன கேள்வி, விளக்கம் வேண்டியிருக்கிறது?
விதர்பாவில் தொலைத்த வீரத்தை உணர்த்துவதால், அந்த மிருகங்களுக்கோ, அதே போன்று இங்கு வாழும் மிருகங்களுக்கோ(மார்ச் அல்லது ஏப்ரல் மாத புது விசையில் வெளிவந்த, ஒவ்வொரு மனிதனும் அவசியம் படிக்க வேண்டிய சாமிக்கண்ணுவின் துயரக் கதை)ஏதேனும் அறிவு வரும் என நீங்கள் நம்புகிறீர்களா? நெல்லூர், ஊஞ்சனை,மேலவளவு...அய்யா சாமிகளா, இரண்டாயிரம் ஆண்டுகளாய் எத்துணை யோனிகள், எத்துணை வன்புணர்ச்சி, எத்தனை கொலைகள், எத்தனை இரத்தம்....
சாதி வெறி நாய்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் பிரயோசனமில்லை.சுட்டுத் தள்ளுவதுதான் தீர்வு.
பி.கு: வலையுலகிற்கு உங்களை வரவேற்கிறேன் வெண்மணி.உங்கள் பதிவுத் தளத்திற்கு இணைப்பு கொடுத்து விட்டேன்.
நன்பா,
'நீ' சாதி பார்க்க மாட்டாய் என்பது எனக்கு ' நன்றாகவே'
தெரியும்.
என்றாலும் கேட்கிறேன் உன் சாதிக்காரன் என் வாயில்
அடித்த மூத்திரத்தை " நீ " குடித்திருக்கிறாயா ?
ஆடு,மாடு, நாய்,பன்றி எல்லாமே "பீ" பேலும்
நன்பா நீயும் கூட பீ தான் பேலுவாயா....
நானும் கூட "பீ" தான் பேலுவேன்
ஆனால் பன்றிகளோடு சேர்ந்து
நீ அதை சுவைத்திருக்கிறாயா ?
'வாய்' ப்பிருக்காது உனக்கு அதை
"விருந்தளிக்க யார்" இருக்கிறார் !
ஆனால் நன்பா உன்னுடைய 'உறவுகள்' எனக்களித்த விருந்தில்
உண்மையிலேயே நான் மூச்சுமுட்டி தினறித்தான் போனேன்.
உன் வீட்டு மாட்டுக்கொட்டாய் தான்
என் வீட்டுக்கு மாளிகை
அதுவும் பொறுக்கவில்லை
தமிழ்குடியை தாங்க வந்த புடுங்கிக்கு
கொழுத்திவிட்டார்கள்,
பச்சைப்பிள்ளைகளோடு சேர்த்து!
குழந்தை வெந்த நாற்றம் அடித்ததா நன்பா,
சாதி பார்க்காத உன் தமிழ்தேச ரத்தம் கொதித்ததா?
என் சகோதரியின் யோனியை ரத்தம் உறைய
சாதி வெறி கொண்டு குதறிய குறிகளின்
பொட்டைத்தனத்தை
கேள்வி கேட்க்காத நன்பனே வா
போராடுவோம்....
நான் தின்ற "பீ" யும்,
மூத்திரமும் சீரனமாகி
பீயும்,மூத்திரமுமாக வெளியேறவில்லை,
வெண்மணி கங்கும் தனியவில்லை,
மேலவலவு ரத்தம் இன்னும் காயவில்லை....
வா போராடுவோம்
உனக்கு இடஒதுக்கீடு
மோடிக்கு ஜனநாயகம்.
பாவெல்
பின்ணூட்டமிட்ட தோழர்களுக்கு மிக்க நன்றி.
Post a Comment