எம்பெருமான் ஆலயத்தை
எழுத்துக் கூட்டிப் படித்து நுழையும் போதே
"தங்கள் பாத அணிகளை இங்கே விடவும்"
என்று படம் வரைந்து உவமையணியோடு
கால் வாங்குகிறது குத்தகைத் தமிழ்.
உள்ளே அடியெடுக்க
உடனே தட்டுப்படும் உண்டியலோ
தனித்தமிழில்.
இதோ "அர்ச்சனை சீட்டு வழங்குமிடம்"
நெம்பித்தள்ளூம் அம்புக்குறிக்குள்
நிர்வாகத்தமிழ்
"சாமி பிரசாதம் கிடைக்குமிடம்"
மடப்பள்ளியும், விலைப்பட்டியலும்
மணக்கும் தமிழில்
"அர்ச்சனை செய்து தங்களுக்கு
அஞ்சலிலேயே அனுப்பி வைக்கப்படும்
ஆகும் செலவு ஒரு நூறு"
சுண்டியிழுக்கும் விளம்பரமோ
சோடியம் தமிழில்.
"கோயில் திருப்பணிக்கு
அம்பாளின் அருள்பெற
நன்கொடை தருபவர்கள்
தாராளமாய் தரவேண்டிய முகவரி"
அடிக்கோடிட்டு அன்னைத் தமிழில்.
மெய்ப்பொருளை அடைய
மேலானது சமஸ்கிருதமென்றால்
எங்கள்
கைப்பொருளை பிடுங்க மட்டும்
கன்னித் தமிழைக் காட்டுவது
வெட்கமாயில்லையா
விளங்காத பரம்பொருளே!
தோழர் துரை. சண்முகம்
புதிய கலாச்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஏன்/
இப்பல்லாம் விரும்பினால், கைப்பொருளைக் கன்னித்தமிழிலும் இழக்கலாமே!
//
மெய்ப்பொருளை அடைய
மேலானது சமஸ்கிருதமென்றால்
எங்கள்
கைப்பொருளை பிடுங்க மட்டும்
கன்னித் தமிழைக் காட்டுவது
வெட்கமாயில்லையா
விளங்காத பரம்பொருளே!
//
வாவ்...சிந்தனையை தூண்டும் வரிகள்.
எழுதியவருக்கும், இங்கே இட்டவருக்கும் பாராட்டுக்கள் !
WOW, Simplu Superb
நல்ல கவிதை.நச்சென்று கருத்து. வாழ்த்துக்கள் !
Post a Comment